பங்களாதேஷ் வேகப் பந்து வீச்சாளர் மெஹிடி ஹாஷனின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 258 வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 28 ஓவர்கள் நிறைவில் 110 ஓட்டங்களுக்கு முன்னணி 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிவருகிறது.
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றிருந்தது.இதையடுத்து 258 ஓட்டங்கைள வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 28 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தனுஷ்க குணதிலக - 21, குசல் பெரேரா - 30, குசல் மென்டிஸ் - 24, பதும் நிசங்க - 08, தனஞ்செய டீ சில்வா 09, பண்டார - 03 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்துள்ளனர்.
பந்து வீச்சில் மெஹிடி ஹாஷன் 9 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்துள்ள நிலையில் இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை